ஒவ்வொரு நாளும் முன்பைவிட வலுப்பெற்று வருகிறேன் – நடராஜன்..!

Tamil Nadu Natarajan has posted a training video on his Instagram page saying that he is getting stronger every day than before.

நடராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு ஒவ்வொரு நாளும் முன்பைவிட வலுப்பெற்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வீரர் நடராஜன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக  விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அணியில் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து இவர் ஆஸ்திரேலியா தொடரில் அதிரடியாக விளையாடி இந்தியா மட்டுமின்றி, உலகளவில் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தார்.

மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நடராஜன் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அவருக்கு பதிலாக அணியில் கலீல் அஹமதுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நடராஜனுக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தற்போது காயத்தில் இருந்து மீண்டும் வரும் நடராஜன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியீட்டு அதில் ” ஒவ்வொரு நாளும் முன்பைவிட வலுப்பெற்று வருகிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.