தனக்குத்தானே முடிவெட்டிய புகைப்படத்தை சச்சின் வெளியிட்டுள்ளார்.கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அனைத்து தரப்பு மக்களும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே பல தரப்பு மக்களும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் ,புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருகின்றனர்.குறிப்பாக விளையாட்டு வீரர்கள்,சினிமா பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் வீடுகளில் இருந்தவாறே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் புதிய ஹேர் ஸ்டைலுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.மேலும் அவரது பதிவில் ,சொந்தமாக முடிவெட்டியுள்ளேன்.எப்படி இருக்கிறது என்னுடைய ஹேர்ஸ்டையில் என்று பதிவிட்டுள்ளார்.
unknown nodeஎன் ஹேர்ஸ்டைல் எப்படி இருக்கு-சச்சின் பதிவிட்ட புகைப்படம்
From playing square cuts ???? to doing my own hair cuts ????????♂️, have always enjoyed doing different things. How’s my new hairdo ????????♂️ looking