சென்னை : ஐபிஎல் 2026 தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய பும்ரா, ஒரு விக்கெட் கூட எடுக்காதது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அஸ்வின்,“இறுதியில் இது ஒரு அணி விளையாட்டு. எனவே மற்றவர்களும் பொறுப்பேற்க வேண்டும். பும்ராவும் இதை தனது தோளில் சுமந்துகொண்டு இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அவர் நிச்சயம் ‘அய்யோ, நான் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம்’ என்று நினைத்திருப்பார்” என்றார்.
மேலும் அஸ்வின் தனது அனுபவத்தின் அடிப்படையில் பும்ராவுக்கு அறிவுரை வழங்கினார்:“என்னுடைய ஒரே ஒரு அறிவுரை என்றால், நீ நல்லாதான் பந்து வீசுகிறாய். நீ 4 ஓவர்களில் 40 ரன்கள் கொடுக்காதே. 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்துவிட்டு விக்கெட் பார்க்காதே. ஏனென்றால், ஒரு போட்டி முடிந்துவிட்டால் அது அந்தப் போட்டியோடு முடிந்துவிடும். அடுத்த போட்டியும் அப்படித்தான். T20-ல் நீ டூர்னமென்ட் ஸ்டேட்ஸுக்காக விளையாடவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் உன் அணிக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறாய் என்பதற்காகத்தான் விளையாடுகிறாய். முந்தைய போட்டி அல்லது சீசன் டேட்டாவைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?நீ தொடர்ந்து நல்ல பந்து வீசி வந்தால், ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் விழும், 4 விக்கெட்டுகள் விழும்.
விக்கெட்டுகள் தானாகவே கவனித்துக் கொள்ளும். உன் Economy Rate-ஐ நீ பார்த்துக்கொண்டே வந்தால், உன் ஸ்டாண்டர்டை நீ தக்க வைத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான்.இன்றைய போட்டியிலும் அவன் நினைத்திருந்தால் 4 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே கொடுத்திருப்பான். அதெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லோரும் மனிதர்கள்தானே. Form, Out of Form என்பது சகஜம். Out of Form என்று கூட நான் சொல்லமாட்டேன். அவன் பந்து வீச்சில் அவ்வளவு மோசமாக இல்லை.” என தெரிவித்தார்.
அஸ்வின் மேலும் கூறியதாவது:“ஒரு Premier Bowler-ஆக இருந்தால் விக்கெட் எடுக்கத் தேவையில்லையா? என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு 4 ஓவர்களை Match to Match construct செய்து பந்து வீசச் சொன்னால் தான் என்ன சொல்கிறேன் என்பது புரியும்.இந்த சீசனில் அவன் 5 போட்டிகளில் விளையாடியிருக்கிறான். அதில் 4 போட்டிகளில் பும்ரா சிறப்பாகப் பந்து வீசியிருக்கிறார். அந்த 3-4 போட்டிகளில் எல்லா எக்ஸ்பெர்ட்ஸும் அவரை பாராட்டியிருக்கிறார்கள். வேறு லெவலில் execute செய்திருக்கிறார். ஆனால் என்ன ஆகிறது? அந்த 3 போட்டிகளில் அவன் நல்லா பந்து வீசியும் விக்கெட் விழாததால், 5 போட்டிகள் முடிவில் எல்லோரும் என்ன கேட்கிறார்கள்? ‘5 போட்டிகளில் விக்கெட் இல்லை’. அந்த 3 போட்டிகளில் அவன் நல்லா பந்து வீசியதை யாரும் பேசவில்லை மறந்துவிட்டார்கள்.
5 போட்டிகளில் விக்கெட் இல்லை என்பதால் மும்பை தோற்கிறது என்று சொல்கிறார்கள். இது தவறு. அவன் ஒவ்வொரு போட்டியிலும் Shut Down செய்து பந்து வீசினால் அவனது Economy Rate குறைவாக இருக்கும். அவன் சுற்றி ஆடுபவர்களின் பிரச்சனையே இங்கு முக்கியம். மொத்த அணியின் Momentum கீழே விழுவதால்தான் அவனும் அப்படியே தெரிகிறார்.அணி சேர்ந்து நல்லா விளையாடினால் அவனும் ஜொலிப்பார்.”எனவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
