லக்னோ : ஸ்ரீலங்கா ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்கா முழு சீசனையும் தவறவிடுகிறார்; LSG விரைவில் புதிய வீரரை அறிவிக்கும்லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் முக்கிய ஆல்-ரவுண்டரான வனிந்து ஹசரங்கா, 2026 ஐபிஎல் தொடரின் முழு சீசனையும் தவறவிடுவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அணியின் தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிராக 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹசரங்கா, அதற்குப் பிறகு எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்தின் கட்டாய உடற்தகுதி சோதனையில் (mandatory fitness test) அவர் பங்கேற்காததால், அவருக்கு No Objection Certificate (NOC) வழங்கப்படவில்லை.இதனால் அவர் ஐபிஎல் சீசனில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
LSG அணியின் குளோபல் டைரக்டர் ஆஃப் கிரிக்கெட் டாம் மூடி இதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் KKR vs LSG போட்டியின்போது பேசுகையில்,“ஹசரங்கா எங்களுடன் இணைய முடியாது என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டு தயாராகி வருகிறோம். அவருக்கான மாற்று வீரரைத் தேடி வருகிறோம். அது 24 முதல் 48 மணி நேரத்துக்குள் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
ஹசரங்கா, மினி ஏலத்தில் அவரது அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு LSG அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இப்போது அவருக்குப் பதிலாக ஒரு புதிய ஆல்-ரவுண்டரை அணி தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மாற்று வீரராக ஜார்ஜ் லிண்டே எதிர்பார்ப்பு
ESPNcricinfo தகவலின்படி, தென்னாப்பிரிக்காவின் ஜார்ஜ் லிண்டே ஹசரங்காவுக்கு மாற்றாக LSG அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 34 வயதான லிண்டே இதுவரை ஐபிஎல்லில் விளையாடவில்லை என்றாலும், SA20 மற்றும் போன்ற ஃபிராஞ்சைஸ் லீக்குகளில் அனுபவம் மிக்கவர்.அவர் தென்னாப்பிரிக்க அணிக்காக 37 T20I போட்டிகளில் விளையாடி 403 ரன்களும், 35 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
கீழ் வரிசை ஆல்-ரவுண்டரான லிண்டே, 147.61 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்கிறார் மற்றும் 7.50-க்கு மேல் எகானமியில் பந்து வீசுகிறார்.ஹசரங்கா இல்லாதது LSG அணிக்கு பெரும் இழப்பு என்றாலும், டாம் மூடி தலைமையிலான நிர்வாகம் விரைவில் பொருத்தமான மாற்று வீரரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சீசனில் ஹசரங்காவின் இல்லாதது LSG அணியின் ஸ்பின் பந்துவீச்சு பலத்தை பாதிக்கும் என்று ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
