தமிழ்நாட்டில் தல என்று செல்லமாக சொல்லப்படுபவர் இந்திய வீரர் மகிந்திர சிங் தோனி தமிழ்நாட்டில் இவருக்கென்று ஒரு பெரிய ரசிகப்பட்டாளமே இருக்கிறது .
இவரும் தமிழ் மீது தமிழ்நாட்டின் மீது பற்று கொண்டவர் அதனை மெய்பிக்கும் விதமாக தனது மகளுடன் தமிழில் உரையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.இது தற்போது வைராகி வருகிறது.
unknown nodeதற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.ஓய்வில் தோனி தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.அவ்வாறு செலவிடும் நேரங்களை தனது இஸ்டாம்கிராமில் பதிவிடுவார்.மேலும் தற்போது சத்தீஸ்கரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அதில் பேசிய தோனி கடந்த 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்த தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.மேலும் இந்திய வீரர் யுவராஜுக்கு முன் தாம் களமிறங்கியது ஏன் என்ற நெடுநாள் கேள்விக்கும் பதிலளித்து பேசினார்.
unknown nodeதற்போது ஓய்வில் உள்ளார் தோனி.இப்படி கிடைக்கும் ஓய்வு நாள்களில் தனது மகள் ஸிவாவுடன் இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை தோனி வழக்கம் கொண்டுள்ளார். இந்நிலையில் தன் மகள் ஸிவாவுடன் தமிழில் பேசுவது போன்ற வீடியோ ஒன்றை தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
unknown nodeவெளியிட்ட வீடியோவில் `Greetings in Two languages’ என்ற தலைப்பில் தோனி பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோவில் கொஞ்சி பேசியப்படி எப்படி இருக்கீங்க? என ஸிவா தோனியிடம் கேட்க அதற்கு நல்லா இருக்கேன் என தோனி தமிழில் பதில் அளிக்கிறார். தற்போது தோனியை கொண்டாடும் அவரின் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதில் சிலர் கஜா புயலை பாரத பிரதமரை தமிழ் நாட்ட பார்த்து எப்படி இருக்கீங்கனு கேட்கலம்மா..ஆனா பிஞ்சு குரலால் நீ கேட்கிறேயமா…என்று நகைச்சுவையோடு வேதனை கலந்த குரலில் மக்கள் கிண்டலடிக்கின்றனர்.ஆனால் தமிழை தன் மகளுக்கு கற்றுக்கொடுக்கிறார் தோனி என்றால் அவர் எவ்வளவு நேசித்திருப்பார் தமிழை என்று பாராட்டும் குவிகிறது.
https://www.instagram.com/p/BqkNuygFlVi/
DINAUVADU