ராஜஸ்தானுக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்த டெல்லி..!

Delhi team scored 154 runs for the loss of 6 wickets at the end of 20 overs.

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் 154 ரன்கள் எடுத்தனர்.

டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, தவான் இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவரும் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து  விக்கெட்டை இழந்தனர். பின்னர், களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் இருவரும் கூட்டணி அமைத்து சற்று அணியை சரிவில் இருந்து மீட்டு வந்தனர்.

சிறப்பாக ஆடி வந்த ரிஷப் பண்ட் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் ஹெட்மியர் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடிக்காமல் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஹெட்மியர் வந்த வேகத்தில் 4 பவுண்டரி விளாசி 28 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் 154 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியில் சேத்தன் சகரியா, முஸ்தபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டும், ராகுல் திவாட்டியா, கார்த்திக் தியாகி தலா 1 விக்கெட்டும் பறித்தனர். 155 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கவுள்ளது.

ராஜஸ்தானுக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்த டெல்லி..!