2026 டி20 உலகக்கோப்பையில் இவுங்க ரெண்டு பேரும் வேணும்! அடம் பிடிக்கும் அஸ்வின்!

அபிஷேக் சர்மா, வருண் ஆகியோர் 2026 டி20 உலகக்கோப்பையில் விளையாடினாள் இந்தியாவுக்கு பலமாக இருக்கும் என அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

Featured image

டெல்லி :இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், 2026 டி20 உலகக் கோப்பைக்கு இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய ஆயுதங்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் வருண் சக்ரவர்த்தியைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவரது யூடியூப் சேனலில் பகிர்ந்த வீடியோவில், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற நட்சத்திரங்களைத் தவிர்த்து இவர்களைப் பாராட்டியது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

“இந்தியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பையை வெல்ல விரும்பும் எந்த அணையும் இரண்டு விஷயங்களை சமாளிக்க வேண்டும். இதுவரை பும்ராவை சமாளிப்பது பற்றிதான் பேசினேன். ஆனால் இப்போது டிம் டேவிட் வருண் சக்ரவர்த்தியை எப்படி சமாளித்தாரோ அதைப் பார்த்த பிறகு, அபிஷேக் ஷர்மா மற்றும் வருண் சக்ரவர்த்திதான் இந்தியாவை வீழ்த்தும் முக்கிய இலக்குகளாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்று அஷ்வின் தெரிவித்தார்.

அஷ்வின் மேலும் விளக்கமாக, “அபிஷேக் ஷர்மாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா இந்தத் தொடரில் பயன்படுத்திய திட்டத்தை மற்ற அணிகளும் பின்பற்றும். வருண் சக்ரவர்த்திக்கு எதிராகவும் அதே போல் தயாராகி வருவார்கள். ஏனெனில் இவர்களை சமாளித்தால்தான் உலகக் கோப்பையில் இந்தியாவை வெல்ல முடியும்” என்று கூறினார். இது இந்திய மண்ணில் நடக்கும் போட்டிகளில் சுழற்பந்து மற்றும் வேகமான ஓப்பனிங் பேட்டிங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

அபிஷேக் ஷர்மா இடது கை ஓப்பனராகவும், சுழற்பந்து வீச்சாளராகவும் பலம் பெற்றவர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் 2024-ல் அபாரமாக ஆடினார். வருண் சக்ரவர்த்தி மர்ம சுழற்பந்து வீச்சாளராக கேகேஆர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இவர்களது இந்திய மண் அனுபவமும், ஸ்பின்-ஃப்ரெண்ட்லி பிட்ச்களும் அணியை வலுப்படுத்தும் என்று அஷ்வின் நம்புகிறார்.

பும்ராவை இதுவரை அனைத்து அணிகளும் பயந்து வந்தன. ஆனால் அஷ்வின் இப்போது கவனத்தை அபிஷேக் மற்றும் வருண் மீது திருப்பியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் டிம் டேவிட் வருணை சமாளித்தது போல் மற்ற அணிகளும் திட்டமிடும் என்று எச்சரித்தார். இது 2026 உலகக் கோப்பைக்கு இந்தியாவின் பலம் என்ன என்பதை முன்கூட்டியே காட்டுகிறது.அஷ்வினின் இந்தக் கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.