E-சிகரெட் பிடித்த பராக்கிற்கு தண்டனை! IPL நிர்வாகம் அதிரடி!

பஞ்சாப் அணியுடனான போட்டியின் போது டிரெஸ்ஸிங் ரூமில் `E-சிகரெட்’ பயன்படுத்திய ராஜஸ்தான் கேப்டன் ரியாக் பராக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Hero Image

ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, டிரெஸ்ஸிங் ரூமில் E-சிகரெட் பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்கிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25% அபராதம் விதித்து IPL நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏப்ரல் 28 அன்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் போட்டியின்போது, பராக் டிரெஸ்ஸிங் ரூமில் E-சிகரெட் பயன்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து IPL நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி, பராக்குக்கு 25% அபராதம் விதித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.

இந்தியாவில் E-சிகரெட்டுகள் மற்றும் எலக்ட்ரானிக் நிகோடின் விநியோக சாதனங்கள் மீதான தடைச் சட்டத்தின்படி, முதல் முறையாக E-சிகரெட் பயன்படுத்தினால் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ரியான் பராக் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களில் ஒருவராகவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் இருப்பதால், இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IPL நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “வீரர்கள் அனைவரும் ஆரோக்கியமான சூழலில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். அத்துடன், அனைத்து வீரர்களும் சட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இளம் வீரர்களிடையே E-சிகரெட் போன்ற பொருட்களின் பயன்பாடு குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னாள் வீரர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள், இளம் தலைமுறை வீரர்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.ரியான் பராக் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதாகவும், ஆனால் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.