நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,”நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.மேலும் இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இ-சிகரெட்டால் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுவதால் தடை விதிக்கப்படுகிறது.மாணவர்கள், இ-சிகரெட் பயன்படுத்துவது 77 சதவீதம் அதிகரித்துள்ளது […]