#AusvsInd: இரண்டு விக்கெட்டை இழந்து தடுமாறும் இந்தியா.!

Mayank Agarwal was also dismissed for 17 following opener Prithviraj Shah in the first Test against Australia.

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரனா பிரித்வி ஷாவை தொடர்ந்து மாயங்க் அகர்வாலும் 17 ரன்களில் அவுட் ஆனார்.

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து, தொடக்க அடக்காரரான பிரித்வி ஷா, மாயங்க் அகர்வால் களமிறங்கினர். பிரித்வி ஷா 2 பந்துகள் விளையாடி ரன் ஏதும் அடிக்காமல் டக் அவுட் ஆனார்.

இதையடுத்து, சேடேஷ்வர் புஜாரா, மாயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்தார். இந்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர் கம்மிங்ஸ் பந்தில் மாயங்க் அகர்வா 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போல்ட் ஆனார். தற்போது இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. சேடேஷ்வர் புஜாரா மற்றும் கேப்டன் விராட் கோலி களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.