WWE : “என்னோட இன்னொரு முகத்த பாப்ப”… ட்ரூ மெக்கின்டைரைவுக்கு எச்சரிக்கை விடுத்த சிஎம் பங்க்!!
எனக்கு ட்ரூ மெக்கின்டைரை பார்த்தாலே சுத்தமாக பிடிக்கவில்லை என சிஎம் பங்க் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : இப்போது WWE -யில் பரபரப்பாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போட்டி என்றால் ட்ரூ மெக்கின்டைர் மற்றும் சிஎம் பங்க் இருவரும் மோதவுள்ள போட்டிகாக தான். இவர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் போட்டியானது “Bad Blood” எபிசோடி-ல் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள, அந்த போட்டி தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
போட்டி நடக்க இன்னும் சில நாட்கள் இருந்தாலும் இருவரும் மாறி..மாறி…வார்த்தை போரில் பேசி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு, முன்பு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சிம் பங்குடன் தான் மோதிக்கொள்ளும் போட்டியில் தன்னுடைய சிறந்த விளையாட்டைக் கொடுப்பேன் எனக் கூறியிருந்தார்.
அவரை தொடர்ந்து அவருக்குப் பதில் அளிக்கும் விதமாக சிஎம் பங்க் ” அவருடன் மோதவுள்ள அந்த போட்டியில் தன்னுடைய மற்றோரு முகத்தை பார்க்கப்போவதாக” எச்சரிக்கும் வகையில் பேசியிருக்கிறார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போதும் ” எனக்கு ட்ரூ மெக்கின்டைரை பார்த்தாலே சுத்தமாகப் பிடிக்கவில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை.
அவருடன் எனது பிரச்சினையை நான் “Bad Blood” – போட்டியில் வைத்து முடித்துக்கொள்ளமுடிவெடுத்துள்ளேன். இப்போது, அவர் மீது அதிகமான கோபங்கள் இருந்தாலும், அதனை வெளிக்காட்ட முடியாமல் கட்டுப்பாடாக இருக்கிறேன். என்னுடைய கோபத்தை நான் அந்த போட்டியில் நிச்சயமாக வெளிக்காட்டுவேன். அந்த போட்டியில் என்னை எதிர்த்து விளையாடும் அவர் என்னுடைய இன்னொரு முகத்தைப் பார்ப்பார்.
அவர் அந்த போட்டியில் சிறப்பான விளையாட்டைக் கொடுப்பேன் எனக் கூறியிருந்தார். இப்போது நான் சொல்கிறேன் அவர் அவருடைய பெஸ்ட்டை கொடுக்க கொஞ்சம் தவறினாலும், நான் என்னுடைய பெஸ்ட்டை கொடுப்பேன்” எனக் கூறி சிஎம் பங்க் ட்ரூ மெக்கின்டைர் பேச்சுக்குப் பதிலும் அளித்தார். போட்டி நடப்பதற்கு முன்பே இவர்கள் இப்படிப் பேசியுள்ளது போட்டியின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.