ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று ஈரானை வீழ்த்தி தொடர்ந்து முதலிடத்தில் இந்திய அணி உள்ளது.
இந்தியா, ஜப்பான், ஈரான், சைனீஸ் தைபே, தென்கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 27ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 10 முறை நடந்து முடிந்துள்ள இந்த தொடரில் 7 முறை முறை தங்க பதக்கம் வென்ற அணியாக இந்தியா கம்பீரமாக இந்த தொடரிலும் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
முதல் நாளிலேயே இரண்டு வெற்றிகளை இந்தியா பெற்றிருந்தது. முதல் போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தியது. அடுத்ததாக சைனீஸ் தைபே அணியுடன் இந்திய கபாடி அணி மீது மோதி இரண்டாவது வெற்றியை பதித்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஜப்பான் அணியை எதிர்கொண்டு 62 – 17 என்ற புள்ளி கணக்கில் வெற்றி வாகை சூடியது.
இதனை தொடர்ந்து நேற்றைய ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் 3 தொடர் வெற்றிகளை பெற்ற ஈரான் அணியுடன் மோதியது. இதில், பரபரப்பாக சென்ற ஆட்டத்தில் 33 – 28 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி தனது முதல் இடத்தை இந்திய கபடி அணி தக்க வைத்து கொண்டது.
