ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்த டேவிட் வார்னர்!

ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த டேவிட் வார்னர் அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் எதாவது செய்துகொண்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். கொரோனா பரவல் காலகட்டத்தில் எல்லாம்

david warner helicopter

ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த டேவிட் வார்னர் அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் எதாவது செய்துகொண்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். கொரோனா பரவல் காலகட்டத்தில் எல்லாம் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் ரீல்ஸ் செய்துகொண்ட வீடியோக்களை வெளியீட்டு வந்தார். அவருடைய வீடியோவும் அந்த சமயம் மிகவும் வைரலாகவும் செய்தது.

அந்த வகையில், தற்போது கிரிக்கெட் விளையாடுவதற்காக டேவிட் வார்னர் ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்த ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வார்னர்  தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று  டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

அந்த வகையில், அவர் தற்போது அவர் பிபிஎல் கிரிக்கெட் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் சிட்னி தண்டர்ஸ் – சிட்னி சிக்சர்ஸ் அணிகள் எஸ்சிஜி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் விளையாட டேவிட் வார்னர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார்.

அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய காரணம் என்னவென்றால், ஹண்டர் பள்ளத்தாக்கில் வார்னருடைய சகோதிரிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.  அந்த திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வார்னர் ஹெலிகாப்டரில் சென்று இருக்கிறார். திருமணம் முடிந்த பிறகு நேரடியாக ஹெலிகாப்டரில் போட்டிக்கும் வந்து இருக்கிறார்.

unknown node