வாரணாசி : கங்கையில் புனித நீராடி பிரதமர் வழிபாடு ...!

The Prime Minister has worshiped at the Ganges in Varanasi constituency.

வாரணாசி தொகுதியிலுள்ள கங்கையில் பிரதமர் புனித நீராடி வழிபாடு செய்துள்ளார்.

பிரதமர் மோடி அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றுள்ள நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தை அடைந்ததும் அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பிரதமரை வரவேற்றனர்.

இதனையடுத்து பிரதமர் கால பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அதன் பின் இரண்டு அடுக்கு படகில் அங்கிருந்து பயணம் மேற்கொண்டார். இதன் பின்னதாக காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்றடைந்த பிரதமர் புண்ணிய நதியான கங்கையில் புனித நீராடி வழிபாடு நடத்தியுள்ளார்.