#Election Breaking: தமிழகம் முழுவதும் சற்றுமுன் மின்னணு வாக்கு எண்ணும் பணிகள் தொடக்கம்..!

With the counting of postal votes completed across Tamil Nadu, the electronic vote counting process has now begun.

தமிழகம் முழுவதும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவடைந்த நிலையில்,தற்போது மின்னணு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலானது கடந்த  ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடைபெற்றது.இதனையடுத்து,இன்று காலை 8 மணி முதல் தமிழகம் முழுவதும் 75 மையங்களில்  வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவடைந்துள்ளன.இதில் திமுக 14 தொகுதிகளிலும்,அதிமுக 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து,தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட மையங்களில் தற்போது மின்னணு வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.