நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தாக தகவல்கள் வெளியாகி வந்தது.
ரஜினிகாந்திற்கு இலங்கை விசா மறுப்பு என்பது வதந்தியே என்று மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சென்னையில் சந்தித்தார். இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரும் இந்த கூட்டத்தில் இருந்தனர்.அந்த சமயத்தில் ,இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் நடிகர் ரஜினியை இலங்கைக்கு வருமாறும், அங்கிருக்கும் தமிழ் மக்களை சந்திக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
unknown nodeஆனால் இதற்கு இடையில் நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தாக தகவல்கள் வெளியாகி வந்தது.இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் இது குறித்து மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையும் இல்லை,அது பற்றிய வந்ததிகளில் எந்த உண்மையுமில்லை.நானும் எனது தந்தையாரும் (இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச )ரஜினிகாந்தின் திரைப்படத்திற்கு பெரும் ரசிகர்கள்.அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம்,ஒரு தடையுமில்லை என்று பதிவிட்டுள்ளார்.