தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதற்கு ஆட்சியை காப்பாற்ற வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி

Chief Minister Palanisamy has said that if the DMK comes to power, the people will not be allowed to live in peace.

திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.இதனிடையே சட்டமன்ற தேர்தல் குறித்து வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள்.திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்று தந்த புதிய திட்டங்கள் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காகவே டெல்லி சென்றேன்.தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதற்கு ஆட்சியை காப்பாற்ற வேண்டும்.கருணாநிதி குடும்ப நலனுக்காகத் தான் டெல்லி சென்றார் என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதற்கு ஆட்சியை காப்பாற்ற வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி