வடமாநிலத்தவர்கள் பற்றி சீமான் பேசும் ஒரு வீடியோவை பகிர்ந்து இவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அரசியல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்னர் வடமாநிலத்தவர்கள் இங்குள்ளவர்கள் தாக்கப்படுகிறார்கள் என பொய்யான தகவல் பரவியதாலும் , ஹோலி பண்டிகைக்காக பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டதாலும் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் வெளியேறுகிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டது.
அரசு நடவடிக்கை :
unknown nodeபின்னர் தமிழக அரசு , பீகார் அரசு உடனடியாக தலையிட்டு ஆய்வு செய்து வதந்திகளை பரப்பியோர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வடமாநிலத்தவர்கள் நலனை உறுதி செய்தனர்.
சீமான் பேச்சு :
unknown nodeஇந்நிலையில், பிரபல அரசியல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில், ஒரு விடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் முதல்வராக இருந்தால், வடமாநில தொழிலார்களை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தால், அவர்கள் எல்லாம் சொந்த ஊருக்கு போய்க்கொண்டு இருப்பார்கள் என ஆவேசமாக பேசியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் கேள்வி :
unknown nodeஇந்த விடியோவை பதிவிட்டு, ஹிந்தி பேசும் நபர்கள் பற்றி ஆக்ரோஷமாக பேசும் சீமான் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என அரசியல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
unknown node