யார் ஊழல் செய்தார்கள் ? இரண்டு கட்சிகளும் வார்தைப்போர் – வானதி சீனிவாசன் கருத்து

Vanathi Srinivasan has said the DMK and AIADMK is going on, both the parties are engaged in a war of words.

திமுக மற்றும் அதிமுக இடையே வார்தைப்போர் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு கட்சிகளும் வார்தைப்போரில் ஈடுபட்டு வருவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி தமிழ் சங்கம் சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.பாஜகவின் தேசிய மகளிரனி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கடந்த முறைக்கு முன்பாக எங்களது அப்போதைய தேசிய தலைவரும், இப்போதைய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அவர்கள் கூட்டத்தில் பேசும்போது சொன்னார்,தமிழகத்தில் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் கூட ,அதிகமாக ஊழல் நடைபெறக்கூடிய ஒரு மாநிலமாக இந்த மாநிலம் இருக்கிறது என்று அன்றே அவர் குறிப்பிட்டு பேசினார்.பாஜக சமீப காலமாக இரண்டு கட்சிகளும் யார் ஊழல் செய்தார்கள் , என்பதைப்பற்றி வார்தைப்போரில் ஈடுபட்டு வருவதை ,அவர்களே அவர்களுடைய  நிலையைப் பற்றி , மக்கள் குறிப்பாக அவர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைத் பற்றி விவாதிக்கிறார்கள் என்று தான் நாங்கள் பார்க்கிறோம் என்று அதிமுக மற்றும் திமுக குறித்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக, திமுக மற்றும் அதிமுக இடையே  2-ஜி ,ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்குகள் தொடர்பாக வார்த்தை போர் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.