பாலம் புனரமைத்த கம்பெனியின் பெயர் அறிக்கையில் குறிப்பிடாதது ஏன்? என கே.எஸ்.அழகிரி ட்வீட்.
குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் தொங்கும் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள மோர்பி தொங்கும் பாலம் விபத்தில் இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அதனது ட்விட்டர் பக்கத்தில், ‘மோர்பி கேபிள் பாலம் விபத்த்தில் 141 பேர் மரணம்! 25 நிமிடங்களில் விசாரித்து முடித்த விசாரணை கமிஷன். பாலம் புனரமைத்த கம்பெனியின் பெயர் அறிக்கையில் குறிப்பிடாதது ஏன்? யாருக்காக இதெல்லாம்? எதை மூடி மறைக்க? என கேள்வி எழுப்பியுள்ளார்.
unknown node