தேர்தல் எப்போது வந்தாலும், அதிமுக வெற்றி பெரும்;இபிஎஸ்.!

அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் என, அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் என, அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததையடுத்து, இன்று பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய அவர் அதிமுக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவர் குறித்து அவைத்தலைவரிடம் மீண்டும் மனு அளித்து, தொடர்ந்து வலியுறுத்துவோம். எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும். இனி ஒற்றைத்தலைமையின் கீழ்  அதிமுக, என சொல்லவேண்டாம், நான் கட்சியின் ஒரு சாதாரண தொண்டனாக செயல்படுவேன். அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என எண்ணும், கட்சியை நேசிக்கும் நபர்கள் வரவேற்கப்படுகிறார்கள், ஒருசிலரைத் தவிர யார்வந்தாலும் அவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக தலைமையில், மதுரையில் மிகப்பெரிய மாநில மாநாடு நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முன்னதாக அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என இபிஎஸ், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோரியிருந்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த 10 நாள் காலக்கெடுவை அடுத்து, தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானது செல்லும் என அறிவித்தது. மேலும் இதனையடுத்து அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.