#Breaking:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது? – வெளியான முக்கிய தகவல்!

When is the TN Urban Local Election - Important Information Released!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பாணையை வருகின்ற 22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வருகின்ற ஜன.22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பான வழக்கு வருகின்ற ஜன.24 ஆம் தேதி வர இருப்பதால்,ஜன.22 ஆம் தேதியே தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,கொரோனா பரவலைக் கருத்தில் கொண்ட தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவும்,மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.

#Breaking:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது? – வெளியான முக்கிய தகவல்!