வருங்கால அரசியல் நடவடிக்கை என்ன ? மு.க.அழகிரி நாளை ஆலோசனை

MK Alagiri will hold consultations with supporters tomorrow on future political activities During assembly election next year

வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் நாளை  ஆலோசனை நடத்துகிறார் மு.க.அழகிரி.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,இதற்கு இடையில் தனிக்கட்சி குறித்து மு.க.அழகிரி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியது.ஆனால் மு.க.அழகிரி தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை.

இதனிடையே மு.க.அழகிரி தரப்பில் அறிக்கை ஓன்று வெளியாகியது. அந்த அறிக்கையில், வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன்.இந்த ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 3-ஆம் தேதி அன்று(அதாவது நாளை ) மாலை 4 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள என் ஆதரவாளர்கள்  தவறாது பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.