மீண்டும் அஇஅதிமுக ஆட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவோம் – ஓபிஎஸ் உறுதி...!

On MGR's birthday, OBS said that they will re-establish AIADMK rule in Tamil Nadu.

மீண்டும் அஇஅதிமுக ஆட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவோம் என எம்ஜிஆர் பிறந்தநாளில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பலர் வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். ஒரு சிலர்தான் வரலாறாகவே வாழ்கிறார்கள். அந்த ஒரு சிலரில் ஒருவரான மறைந்த மாமனிதர், வாரி வழங்கி வாழ்நாளெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மகிழும் வண்ணம் ஆட்சி நடத்தியவர், சாமானியனின் கருத்திற்கு மதிப்பளித்தவர், சாமானிய மக்களுக்காக சட்டங்களை இயற்றியவர், திட்டங்களைத் தீட்டியவர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், மனிதப் புனிதர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், ‘பாரத ரத்னா’, மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வழியில், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்து மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை தமிழ்நாட்டில் விரைவில் ஏற்படுத்துவோம் என இந்த நன்னாளில் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

unknown node