நாங்கள் 85 சதவீத வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். சிலவை சூழ்நிலை காரணமாக நிறைவேற்றப்படாமல் இருக்கலாம். – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
இன்று திருவாரூரில் திமுக பிரமுகரின் திருமண நிகழ்வின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது மணமக்களை வாழ்த்தி பேசுகையில், தமிழக அரசால் நிறைவேற்றப்படும் கோரிக்கைகள் பற்றியும், பல்வேறு திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
சீர்திருத்த திருமணம் :அவர் கூறுகையில், சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் முதன் முதலாக அளித்தது அண்ணா தலைமையிலான திமுக அரசு தான் எனவும், தற்போது நடைபெற்ற இந்த திருமணம் தாய்மொழி தமிழில் நடைபெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
கள ஆய்வில் முதல்வர் :அடுத்ததாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை 2 ஆண்டுகளில் செயல்படுத்தி வருகிறோம். திட்டங்களை அறிவித்துவிட்டோம். என இருக்காமல் மாவட்ட வாரியாக அது முறையாக செயல்படுகிறதா என கள ஆய்வில் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்து வருகிறோம்.
கஜானா காலி :திமுக அரசு அறிவித்த எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஆனால் நாங்கள் 85 சதவீத வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். சிலவை சூழ்நிலை காரணமாக நிறைவேற்றப்படாமல் இருக்கலாம் . முந்தைய அரசு தமிழகத்தை கடனாளியாக மாற்றிவிட்டு கஜானாவை காலி செய்து விட்டனர். என குற்றம் சாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இறுதியில் மணமக்களை வாழ்த்தி விட்டு தனது உரையை முடித்து கொண்டார்.