இந்தியாவை நட்பு நாடகவும், பெரிய சக்தியாகவும் கருதுகிறோம் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!

Russian President Vladimir Putin has said that he views India as a friendly country and a great power.

இந்தியாவை நட்பு நாடகவும், பெரிய சக்தியாகவும் கருதுகிறோம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உச்சி மாநாடு இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்கள் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் ரஷ்ய பிரதமர் புதினை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரவேற்று அவருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்பின் பேசி உள்ள ரஷ்ய பிரதமர், இந்தியாவை ஒரு பெரிய சக்தியாகவும், நட்பு நாடாகவும் கருதுகிறோம். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வளர்ந்து வருகிறது. இது எதிர்காலத்திலும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் இயற்கையாகவே பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அனைத்து நாடுகளைப் பற்றியும் நாங்கள் கவலைப்படுகிறோம். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் குறித்து நாங்கள் மிகவும் கவலைப் படுகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.