நாட்டில் நிலவி வரும் மதவெறி, வெறுப்புணர்வு சூழ்நிலைக்கு எதிராக, நாங்கள் (காங்கிரஸ்) தொடர்ந்து போராடுவோம். – ராகுல் காந்தி பேச்சு.
காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு 3நாள் நிகழ்வாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்பூரில் நடைபெற்று வருகிற்து. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் ராகுல் காந்தி பேசுகையில், அனைவருக்கும் மரியாதை கொடுப்பது தான் நமது கலாசாரம். அதுதான் நமது உண்மையான வலிமை. என குறிப்பிட்டார். மேலும், பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை சமுதாயத்தினர், பெண்கள், இளைஞர்களுக்கும் சமமாக பிரதிநிதித்துவம் கொடுப்பதே நமது நோக்கம். என குறிப்பிட்டார்.
அடுத்ததாக, நாட்டில் நிலவி வரும் மதவெறி, வெறுப்புணர்வு சூழ்நிலைக்கு எதிராக, நாங்கள் (காங்கிரஸ்) தொடர்ந்து போராடுவோம். ஏழைகள், விவசாயிகளுக்காக காங்கிரஸ் தொடர்ந்து குரல் எழுப்பும் எனவும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி அந்த மாநாட்டில் தெரிவித்துள்ளார்.