பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது அரசின் நடவடிக்கை குறித்து விமர்சித்ததாக கூறி தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில்,உரிய முகாந்திரம் இன்றி அவதூறு வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்தஅவதூறுவழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்.