சசிகலாவை தொடர்ந்து அவரது உறவினர் இளவரசிக்கு கொரோனா உறுதி

VK Sasikala's relative Ilavarasi, too tests positive for Corona infection and she was taken to Victoria Hospital, Bangalore for treatment

சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதியானது.

சசிகலா உடன் பெங்களூரு சிறையில் இருந்த இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனையில் அவர்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உறவினர் இளவரசி சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இளவரசி அடுத்த மாதம்  5-ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது .வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ள நிலையில் ஒரு வாரம் கழித்து இளவரசியும் விடுதலையாகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சசிகலா கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.