எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை.! நாங்கள் தான் உண்மையான அதிமுக.! -வைத்திலிங்கம் பேட்டி.!

எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. நாங்கள் தான் உண்மையான அதிமுக என வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார்.

எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. நாங்கள் தான் உண்மையான அதிமுக என வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாகவும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ரத்து செய்வது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்குகள் நேற்று தனிநீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்பட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஒற்றை நீதிபதி தீர்ப்பு :

இந்த ஒற்றை நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஒற்றை நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

உண்மையான அதிமுக :

அவர் கூறுகையில், எங்களுக்கு எந்த பின்னடைவும் இதுவரை ஏற்படவில்லை என கூறினார். மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்துள்ளோம். அந்த வழக்கை சந்திப்போம். நாங்கள் தான் உண்மையான அதிமுக என மக்கள் மன்றத்தில் நிரூபிப்போம் என குறிப்பிட்டார்.

சசிகலா – டி.டி.வி.தினகரன் :

அடுத்து சசிகலா, டி.டி.வி.தினகரன் பற்றி செய்தியாளர்கள் கேட்கையில், வழக்கு நடந்து கொண்டிருப்பதால் சந்திக்கவில்லை என்றும், அனைவரும் ஒன்றாக இணைந்து செய்யப்பட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பேட்டியளித்தார்.