நெருங்கும் சட்டமன்ற தேர்தல் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

The Chief Electoral Officer of Tamil Nadu is consulting with the Election Commission officials regarding the election preparations

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.எனவே நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.