பொது சிவில் சட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும் வகையில் மத்திய பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசால் கூறப்பட்டது. அதற்கான வேலைகளையும் மத்திய அரசு மேற்கொண்டது. இந்த பொது சிவில் சட்டத்திற்கு எதிர்கட்சியினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர். இதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் கூறினார். அவர் கூறுகையில், பொது சிவில் சட்டம் குறித்து வரைவு 21வது சட்ட ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் முடிவு எடுக்கும் முன்னரே 21வது சட்ட ஆணையம் காலாவதி ஆகிவிட்டது.
இதுவரையில் பொது சிவில் சட்டம் குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவும், 22வது சட்ட ஆணையம் இது குறித்த முடிவுகளை விருப்பப்பட்டால் எடுக்கலாம் எனவும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.