மதுரை எய்ம்ஸ் : 2026 வரை அவகாசம் உள்ளது.! மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்.!

அந்த வகையில் திமுக எம்பி கதிர் ஆனந்த், மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும் என மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்விக்கு மத்திய அமைச்சர்

Union Minister Pravin Pawar

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கி மணிபூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரியதில் அமளி ஏற்பட்டு இரண்டு நாட்களாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கி உள்ளன. இருந்தாலும், எதிர்க்கட்சி எம்பிக்கள் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் திமுக எம்பி கதிர் ஆனந்த், மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும் என மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறுகையில் ஜப்பான் நிறுவனத்துடனான கடன் ஒப்பந்தம் படி 2026 வரை மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கு காலஅவகாசம் உள்ளது. 2026இல் மதுரை எய்ம்ஸ் கட்டிமுடிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.