மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார்.! எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அமித்ஷா கடிதம்.!

மணிப்பூர் விவகாரம் விவாதிக்க தயார் என எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா கடிதம் எழுதியுள்ளார்.

Union Minister Amit shah

மணிப்பூர் விவகாரம் விவாதிக்க தயார் என எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா கடிதம் எழுதியுள்ளார்.

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையேயான வன்முறை இந்த வன்முறை சம்பவங்களில் பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்ட பெண்கள் விவகாரம் , பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் தற்போது உலகம் அறிந்த பிரச்சனையாக மாறி உள்ளது. இந்த விவகாரம் குறித்து நடந்து வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என கூறி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம் பெற்று வருகிறது. மேலும், பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடளுமன்ற இரு அவைகளிலும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் . அதில் மணிப்பூர் விவகாரம் குறித்து இரு அவைகளிலும் விவாதிக்க தயார் என்றும் அதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் அமித்ஷா.