இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!

The Union Cabinet, headed by Prime Minister Narendra Modi, is meeting in Delhi today.

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே தீர்வு என தற்பொழுது அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், மக்கல் பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனவே, தடுப்பூசி தட்டுப்பாடு பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது, இந்த கூட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு, கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பூசிகள் கொள்முதல் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!