#Breaking: 3 வேளாண் சட்ட ரத்து மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் !

Union Agriculture Minister Narendra Singh Tomar has tabled the bill repealing the 3 Agriculture Act in the Lok Sabha.

3 வேளாண் சட்ட ரத்து மசோதாவை நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்துள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.மேலும்,இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.அதன்படி,நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில்,3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தது.

ஆனால்,நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் மக்களவை எம்பிக்கள் சபாநாயகர் வெங்கையா நாயுடு அவர்களின் இருக்கையை முற்றுகையிட்டும்,முழக்கத்தையும் எழுப்பி வந்தனர்.

இதன்காரணமாக,நாடாளுமன்ற மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில்,12 மணிக்கு மீண்டும் தொடங்கிய மக்களவையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை எம்பிக்கள் ஒப்புதல் அளித்தனர்.இதனையடுத்து, 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 19 ஆம் தேதி அறிவித்த நிலையில்,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.