மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றில் உதயநிதி.? வடிவேலுவின் சூசகமான விருப்பம்.!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட வடிவேலு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும் என விருப்பம்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட வடிவேலு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

சென்னையை தொடர்ந்து, தற்போது மதுரையில் தற்போது முதல்வர் மு.கஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடிகர் வடிவேலு கலந்து கொண்டார்.

வடிவேலு நெகிழ்ச்சி :

புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், இங்க பார்த்த படமெல்லாம் வெறும் படமல்ல. எல்லாம் நிஜம். இப்போது என் நெஞ்சமெல்லாம் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இது அனைவருக்கும் தைரியம் தன்னம்பிக்கை கொடுக்கும் புகைப்பட கண்காட்சியாகும். பல போராட்டங்களை கடந்த பின்னர் முதலமைச்சர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். என பேசினார்.

வடிவேலு விருப்பம் :

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயணம் குறித்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும் எனவும், உதயநிதி நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் அவரை கட்டாயப்படுத்தி நடிக்க வைப்போம். என கூறினார் நடிகர்வடிவேலு.

மாமன்னன் :

வடிவேலு தற்போது, உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்துள்ள மாமன்னன் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடத்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.