தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
நேற்று முன்தினம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், அங்கிருந்த தமிழக மீனவர்கள் 6 பேர் மீதும் திடீரென இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர். மேலும், கடலில் மீன்களுக்காக வைத்திருந்த வலைகளையும் இலங்கை கடற்படையினர் அறுத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
unknown nodeதாக்குதல் :இலங்கை கடற்படையின் இந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
unknown nodeமுதல்வர் கடிதம் :முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்களை தடுக்க இருநாட்டு தூதரகமும் அதற்கான வழிமுறைகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் அதில் முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.