இதுதான் திரு.ஸ்டாலின் அடிக்கடி கூறும் 'சொல்லாததையும் செய்வதோ? – டிடிவி

மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது டிடிவி தினகரன் ட்வீட்.

மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது டிடிவி தினகரன் ட்வீட்.

புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியிருப்பதாக செய்திகள் வருவதாக டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து ட்விட்  செய்துள்ளார்.

அந்த பதிவில், மின்கட்டணத்தைக் கடுமையாக உயர்த்திய தி.மு.க அரசு, எந்தவித அறிவிப்பும் இன்றி புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தையும் இஷ்டம்போல் உயர்த்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன.

தமிழ்நாட்டு மக்களை எந்த அளவிற்கு துன்புறுத்த முடியுமோ அந்தளவிற்கு அடுத்தடுத்து தி.மு.க அரசு செயல்பட்டு வருவதற்கு இது இன்னொரு சான்று. மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது. இதுதான் திரு.ஸ்டாலின் அடிக்கடி கூறும் ‘சொல்லாததையும் செய்வதோ?!’ என  பதிவிட்டுள்ளார்.

unknown node