வெளியிடும் வரை இத்தேர்வை நடத்த கூடாது -திருமாவளவன் வேண்டுகோள்

Thirumavalavan has said that the Central Government should conduct the postal examination in state languages including Tamil.

அஞ்சல்துறை தேர்வை மத்திய அரசு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அஞ்சல்துறைக்கான அக்கவுன்டன்ட் பதவிகளுக்கான தேர்வு வரும் பிப்ரவரி 14 -ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தது.எனவே அடுத்தமாதம் நடைபெறவுள்ள அஞ்சல்துறைக்கான தேர்வு அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அஞ்சல்துறைக்கான மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இடம் பெற்றுள்ளது.இதனால்அஞ்சல்துறை தேர்வுகளை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,அஞ்சல்துறைக்கு கணக்கர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தி,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இந்ததேர்வுநடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு இந்த தேர்வைதமிழ்உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை வெளியிடும் வரை இத்தேர்வை நடத்த கூடாது என்று தெரிவித்துள்ளார்.

unknown node
வெளியிடும் வரை இத்தேர்வை நடத்த கூடாது -திருமாவளவன் வேண்டுகோள்