காலாவதியான வாகனங்களை அழிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு 3000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காலாவதியான வாகனங்கள் அழிப்பது குறித்த நடவடிக்கைகள் குறித்து திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் கூறியுள்ளார்.
அதில், காலாவதியான வாகனங்களை அழிக்கும் திட்டத்திற்கு கடந்த நிதியாண்டேமத்திய அரசு 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அது நடப்பு நிதியாண்டில் 3000 கோடி ரூபாயாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த நீதியானது, காலாவதியான வாகனங்களை அழிக்க முன்வருபவர்களுக்கு புதிய வாகனங்கள் மீதான வரி சலுகைகள் உள்ளிட்ட வழிமுறைகள் பற்றி விரைவில் வெளியிடப்படப்படும் என தெரிவித்தார். அதனை மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் என கூறினார்.