#Breaking:10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை;தேர்வு ஒத்திவைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

The Tamil Nadu government has announced that students in classes 10,11,12 will be given leave till January 31

சென்னை:தமிழகத்தில் உள்ள 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக,1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து முன்னதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால்,10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அரசு தெரிவித்தது.

இதற்கிடையில்,கொரோனா அதிகரித்து வருவதால் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்து,ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

இந்நிலையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாகவும் , தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

unknown node