2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடகாவில் பேசுகையில், ‘நீரவ் மோடி, லலித் மோடி , நரேந்திர மோடி என குறிப்பிட்டு திருடர்களின் பெயர்களுக்கு பின்னால் மோடி என வந்தது எப்படி.?’ என்றவாறு பேசினார். இதனை குறிப்பிட்டு மோடி எனும் பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி மோடி பெயர் கொண்டவர்களை இழிவுபடுத்திவிட்டார் என்று குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தகுதிநீக்கம் :
unknown nodeராகுல்காந்தி அந்த சமயம் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருப்போர் இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலே சிறைதண்டனை பெற்றால், அந்த பதவியில் நீடிக்க முடியாது என்ற விதிகள் அடிப்படையில், அவரை தகுதி நீக்கம் செய்து நாடாளுமன்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பல்வேறு எதிர்க்கட்சியினரும் போராட்டங்களை நடத்தினர். ராகுல் காந்திக்கு ஆதரவாக தற்போது வரை எதிர்ப்பு குரல்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
ராகுல்காந்தி வாதம் :
unknown nodeஇதனை அடுத்து கடந்த மூன்றாம் தேதி சூரத் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி 2 ஆண்டு சிறைத்தண்டனை தீர்ப்புக்கு தடை கேட்டு மேல்முறையீடு செய்தார். அதன் மீதான விசாரணை மே 13ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருந்த நிலையில், அறிவித்தபடி 13ஆம் தேதி ராகுல்காந்தி மேல்முறையீடு விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில், ராகுல் காந்தி வழக்கில் உரிய விசாரணை நடைபெறவில்லை. நியாயமான முறையில் விசாரணை நடைபெறவில்லை. இந்த வழக்கிற்கு அதிகபட்ச தண்டனை தேவையில்லை. என வாதிடப்பட்டது.
வயநாடு இடைத்தேர்தல் :
unknown nodeமேலும், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அவரது பதவியை பறிப்பதற்காகவே இந்த அதிகபட்ச சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது என்றும், தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, அதன் பிறகு ராகுல்காந்தி விடுதலை செய்யப்பட்டாலும் அந்த இடைத்தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய முடியாது. அந்த தேர்தலால் அரசு கஜானாவுக்கு தான் இழப்பீடு ஏற்படும் என ராகுல் காந்தி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இன்று தீர்ப்பு :
unknown nodeஅதேபோல் ராகுல் காந்தி மீது வழக்கு தொடுத்த புர்னேஷ் மோடி என்பவர் தரப்பில் வாதிடுகையில், ராகுல் காந்தி மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனாலும், அவர் திரும்பத் திரும்ப அதே குற்றத்தை செய்து வருகிறார். அவர் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் பொறுப்பற்ற விதத்தில் பேசி வருகிறார். மற்றவர்களை கலங்கப்படுத்துவதுடன், உணர்வுகளை புண்படுத்துவது தொடர்பான பேச்சுகளை ராகுல்காந்தி பேசி வருகிறார். என்று வாதிடப்பட்டது. இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஏப்ரல் 20ஆம் தேதி ஆன இன்று ஒத்திவைத்தார். அதன்படி இன்று ராகுல் காந்தியின் தீர்ப்பு வெளியாக உள்ளது.
எதிர்ப்பார்ப்பு :
unknown nodeஇரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை தீர்ப்புக்கு தடை இன்று விதிக்கப்பட்டால், அது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்பி பதவி தகுதிநீக்கத்தை நிறுத்தி அவர் மீண்டும் எம்.பி ஆவதற்கு வழிவகுக்கும். எனவே, இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கப்படும் தீர்ப்புகளில் ஒன்றாக தற்போது மாறிவிட்டது.