உண்மையான போராளி...! எனது தந்தை அறுவை சிகிச்சை செய்த காலுடன் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்....! – அக்சராஹாசன்

எனது தந்தை உண்மையான போராளி. தனக்கு விருப்பமான பணிகளுக்கு எல்லாவிதமான வலிகளையும் பொறுத்துக் கொண்டு போராடுகிறார்.

எனது தந்தை உண்மையான போராளி. தனக்கு விருப்பமான பணிகளுக்கு எல்லாவிதமான வலிகளையும் பொறுத்துக் கொண்டு போராடுகிறார்.

நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த தேர்தலில் போட்டியிடும் இவருடன், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் சில கட்சிகள் கூட்டணியாக இணைந்துள்ளதுகமலஹாசன் இந்த தொகுதியில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து, இவர் பல இடங்களுக்கு சென்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை செய்த காலுடன் தான் கமல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து, கமலஹாசனின் மகள் அக்சராஹாசன், தனது ட்வீட்டர் பக்கத்தில், கமல் தனது தோளில் கைபோட்டு செல்வது போன்று, ஒற்றை காலை தூக்கியவாறு பிரச்சாரம் மேற்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு, ‘எனது தந்தை உண்மையான போராளி. தனக்கு விருப்பமான பணிகளுக்கு எல்லாவிதமான வலிகளையும் பொறுத்துக் கொண்டு போராடுகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.