ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர்...!

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர்.

கடந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் இருந்து, ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும், இந்தியர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நீங்கள் அனைவரும் பரிசுகளை வென்று, நாட்டை பெருமைப்படுத்துவீர்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node