கோடநாடு கொலை கொள்ளை விவகாரம்>! தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த ஓபிஎஸ்.!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆகஸ்ட் 1இல் போராட்டம் நடத்த உள்ளனர்.

O Panneerselvam

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆகஸ்ட் 1இல் போராட்டம் நடத்த உள்ளனர்.

இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களிடம் சந்தித்து கோடநாடு கொலை – கொள்ளை விவகாரம் குறித்து பேசினர். அவர்கள் கூறுகையில், கடந்து 2017 ஆம் ஆண்டு கோடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகுதூர் கொலை செய்யப்பட்டு அங்குள்ள முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதை தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் சந்தேகப்பட்ட ஓட்டுநர் கனகராஜ், சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ், காவல் உதவி ஆய்வாளர் என மொத்தமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

தற்போது வரை குற்றவாளிகள் யார் என காவல்துறையினரால் கண்டறியப்படவில்லை. விசாரணை செய்யும் அமைப்புகள் தான் மாறுகிறது தவிர இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. மேலும், அங்கு காணாமல் போன விஸ்வ பகதூர் எனும் காவலாளியையும் இன்னும் காவல்துறையினர் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 90 நாட்களுக்குள் கோடாநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பான உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்று தேர்தல் பிரச்சாரத்தின் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. என கூறி கோடநாடு கொலை கொள்ளை விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் தமிழக முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் புதிய குற்றவாளிகளின் கண்டுபிடிக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. மேலும், அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களின் பொறுப்பு என்று குறிப்பிட்டார். அடுத்து இரட்டை இலை விவகாரம் குறித்து பேசுகையில் இன்னும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கிறோம் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேசினர்.

கோடநாடு கொலை கொள்ளை விவகாரம்>! தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த ஓபிஎஸ்.!