ராகுல்காந்தி தகுதிநீக்கம் எதிரொலி.! நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்.!

ராகுல்காந்தியை தகுதிநீக்கம் செய்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவுள்ளனர்.

ராகுல்காந்தியை தகுதிநீக்கம் செய்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவுள்ளனர்.

பிரதமர் மோடி பெயர் குறித்து சர்ச்சை விளைவிக்கும் விதமாக பேசியதாக கூறி குஜராத் , சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து . இதனால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதாக நாடளுமன்றம் அறிவித்தது.

தொடர் அமளி :

இந்த தகுதிநீக்க நடவடிக்கையானது காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு எதிர்க்கட்சியினர் மத்தியிலும் எதிர்ப்பை உண்டாக்கியது. மேலும், ராகுல் காந்தி விவகாரத்தை நாடளுமன்றத்தில் விவாதிக்க கோரி அமளி ஏற்பட்டு நாடாளுமன்றம் முடங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம் :

இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் , ராகுல்காந்தியை தகுதிநீக்கம் செய்த சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சியினர் முடிவு எடுத்துள்ளனர். சபாநாயகர் நடுநிலையோடு செயல்படாமல் , ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என ஓம் பிர்லா மீது எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.