டெல்லியில் பாஜகவுக்கு எதிராக ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்.! குடியரசு தலைவரிடம் புகார் மனு.!

டெல்லியில் பாஜகவுக்கு எதிராக ஒன்றுகூடி எதிர்க்கட்சியினர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். குடியரசு தலைவரிடம் புகார் மனு அளிக்க முடிவு எடுத்துள்ளனர்.

டெல்லியில் பாஜகவுக்கு எதிராக ஒன்றுகூடி எதிர்க்கட்சியினர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். குடியரசு தலைவரிடம் புகார் மனு அளிக்க முடிவு எடுத்துள்ளனர்.

நேற்று குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில், பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் கருத்தை தெரிவித்ததாக கூறி காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும், ஜாமீன் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காங்கிரஸ் எதிர்ப்பு :

ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாஜக அரசு :

மேலும், இன்று டெல்லியில் காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றாக கலந்து ஆலோசித்து வருகின்றனர். பாஜக அரசு எதிர்க்கட்சியினர் மீது தொடர்ந்து சட்டவிரோதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றை தவறாக பயன்படுத்துகிறது என்றும் குடியரசு தலைவரிடம் மனு அளிக்க உள்ளனர்.

டெல்லியில் பேரணி :

இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த உடன் மாலையில் டெல்லியில் எதிர்க்கட்சியினர் பேரணி மேற்கொள்ளவும் உள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.