5 ஆண்டுக்கு ஒருமுறை அதிசயம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது  -ரஜினி கருத்துக்கு திருநாவுக்கரசர் பதில்

ஆட்சி மாற்றத்தையே அதிசயம் என ரஜினி கூறியிருக்கலாம் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் 2021இல் தமிழக மக்கள் 100க்கு 100

ஆட்சி மாற்றத்தையே அதிசயம் என ரஜினி கூறியிருக்கலாம் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.தமிழக அரசியலில் 2021இல் தமிழக மக்கள் 100க்கு 100 சதவீதம் அற்புதத்தை அதிசயத்தை நிகழ்த்துவார்கள்  என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.இவர் இவ்வாறு கூறிய கருத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறுகையில்,ஆட்சி மாற்றத்தையே அதிசயம் என ரஜினி கூறியிருக்கலாம்.தமிழகத்தில் 5 ஆண்டுக்கு ஒருமுறை அதிசயம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது  என்று  திருநாவுக்கரசர் எம்.பி தெரிவித்துள்ளார்.