திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 5ஆம் தேதி) நடைபெறும் திமுக பொருளாளரும், தமிழக அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டமானது காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் எனவும், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும், கலைஞர் நூற்றாண்டு விழா பற்றி இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் 72 பேரும் கலந்துகொள்வார்கள் எனவும், இதில் கலைஞர் நூற்றாண்டு விழா மட்டுமின்றி, நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
unknown node